(எம்.மனோசித்ரா)

அரச சேவையில் இருபது வருடங்களாக ஈடுபடும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வின்றி நிலுவைச் சம்பளத்தை கொள்ளையிடுவதோடு மாத்திரமின்றி வழங்கப்பட்டு வரும் சம்பளத்தை வங்கியில் வைப்பிலிடும் போது 5 வீத வரி அறவிடப்படுகின்றதென  இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறான விடயங்களுக்கு தாம் கடுமையான எதிர்ப்பினை வெளியிடுவதாகவும் அச் சங்கம் தெரிவித்துள்ளது. 

மருதானை சமூக, சமய நடுநிலையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் உப செயளாலர் சுந்தரலிங்கம் பிரதீப் மேற்கண்டவாறு தெரிவித்தார்.