(இரோஷா வேலு) 

மாத்தறை - ஊருபொக்க பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்த எழுவரை ஊறுபொக்க பொலிஸார் மற்றும் கொடகமுவ முகாமைச் சேர்ந்த விசேட அதிரடிப் படையினர் நேற்று இரவு மடக்கிப் பிடித்துள்ளனர். 

இச் சம்பவத்தின் போது 22 முதல் 53 வயதுகளுக்குட்பட்ட ஊறுபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு ஆண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஊறுபொக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிலிதன்த உமங்தொல பிரதேசத்தில் புதையல் தோண்டும் பணிகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக வழங்கப்பட்ட தகவலுக்கமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த எழுவரும் இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.