(ரி.விரூஷன்)

இறுதிப்போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ள தகவல்கள் முழுப் பொய் என இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் இருந்தவரும் தற்போது வடக்கு மாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினருமாக இருக்கின்ற சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் 5 ஆயிரம் வரையிலான பொது மக்களே கொல்லப்பட்டிருந்ததாக போர்க்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்தவரும் தற்போது வனஜீவராசிகள் அமைச்சராகவும் இருக்கின்ற பீல்ட் மார்சர் சரத் பொன்சேகா சில தினங்களிற்கு முன்னர் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் 30 ஆயிரம் அல்லது அதற்கு மற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்பதெல்லாம் பொய் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் சரத் பொன்சேகாவின் கருத்தை அடியோடு மறுதலித்துள்ள மாகாண சபை உறுப்பினர் பொன்சேகாவே தற்போது பொய்களைக் கூறி வருகின்றதாகவும் குற்ஞ்சாட்டியுள்ளார்.

பொன்சேகாவின் கருத்து தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.