ஆப்கானிஸ்தானல் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை தலிபான் தீவிரவாதிகளுடனான மோதலில் 21 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானில் இயங்கி வரும் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந் நாட்டு பாதுகாப்பு படையினரும் அமெரிக்கா உள்ளிட்ட கூட்டுப் படையினரும் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்

இந் நிலையில், ஆப்கானிஸ்தானின் குன்டூஷ் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று நள்ளிரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் ஆப்கானிய பாதுகாப்பு 

நேற்று நள்ளிரவு ஆரம்பமாகி இன்று காலை வரை இடம்பெற்ற இந்த தாக்குதலில் பாதுபாப்பு படையினர் சார்பில் 13 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் ஜவ்ஜான் மாகாணத்திலுள்ள காம்யாப் மாவட்டத்தில் பொலிஸாருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையேயான மேலும் ஒரு தாக்குதலில 8 படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட  தாக்குதலால் 21 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.