கப்பலிலிருந்து எரிபொருள் களஞ்சிய சாலைக்கு எண்ணெய் விநியோகிக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டதால், கடற் பகுதி மாசடைந்ததையடுத்து அதனை சுத்தமாக்கும் பணியில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாயிலேயே குறித்த கசிவு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தொன் கணக்கான எண்ணெய் கடலில் கலந்து குறித்த கடற் பகுதி மாசடைந்துள்ளது.  

இவ்வாறு கடலில் கலந்துள்ள எண்ணெயை அப்புறப்படுத்துவதற்கா 58 இராணுவ வீரர்களும் 300 கடற்படையினரும் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரையோரபாதுகாப்பு பிரிவு, கடற்படை, சமுத்திரவியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த 500 பேர் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

25 தொன் மசகு எண்ணெய் உஸ்வத்கெரியாவா பகுதியிலுள்ள கடற்பகுதியில் கலந்துள்ளதாக சமுத்திரவியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடற்கரையில் இருந்து சுமார் 5 கிலோமீற்றத்ர் தூத்திலேயே எண்ணெய்குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த கடற்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு கடலில் கலந்துள்ள எண்ணெய் படிமங்கள் அனைத்தும் கரையையெங்கி வருகின்ற நிலையில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் இடம்பெறுமென கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.