முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டுளளதோடு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 4.8 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை இன்றைய தினம்(10) விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 28ம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.இதன் பிரகாரமே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று மன்றில் ஆஜராகினார்.

இந்நிலையில்  கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

இவர்கள் அனைவருக்கும் தலா 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையின் அடிப்படையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு  வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

டி.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணப் பணிகளின் போது அரச பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்லேயே அவர் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.