பிரான்சின் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பிரிட்டனை சேர்ந்த இருவர் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்

நபர் ஒருவர் கத்தியை பயன்படுத்தி தாக்கியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் உடனடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார் அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என சந்தேகம் வெளியாகியுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரைணைகளின் மூலம் இது பயங்கரவாத நோக்கத்தை அடிப்படையாக கொண்ட சம்பவம் என்பதற்கான எந்த வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் நால்வரின் நிலை ஆபத்தானதாக காணப்படுகின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருவரை தாக்கய நபர் ஒருவரை வேறு இருவர் துரத்திச்சென்றதை நான் பார்த்தேன் என நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவரிடம் இருந்த இரும்புதுண்டுபோன்ற ஒன்றால் அவர் அவர்களை தாக்கிய பின்னர் கத்தியை பயன்படுத்தினார் என அந்த நபர் தெரிவித்துள்ளார்.