இலங்கை மாட்டுவண்டி சவாரி வரலாற்றில் 98 ஜோடிகள் பங்குபற்றிய போட்டி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்று நிறைவேறியது. 

குறித்த சவாரி போட்டி இனறு கிளிநொச்சி அக்கராயன் சவாரி திடலில் இடம்பெற்றது. 

கிளிநொச்சி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போட்டியில் வரலாற்றில் இல்லாதவாறு 98 ஜோடிகள் 5 பிரிவுகளில் பங்கு பற்றின. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக திகழும் குறித் போட்டி இலங்கையில் 50 வருடங்களிற்கு மேலாக முன்னெடுத்து வரப்படுகின்றது. 

குறித்த போட்டியில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து 98 ஜோடிகள் அழைத்து வரப்பட்டு விறுவிறுப்பாக போட்டி இடம்பெற்றது. அதி கூடிய ஜோடிகள் பங்குபற்றிய முதலாவது போட்டி இது என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர் மத்தியில் தற்புாது குறித்த விளையாட்டு பாரிய இடம்பிடிப்பதாக தெரிவிக்கும் ஏற்பாட்டாளர்கள், இதுவரை மாகாண ரீதியில் எமக்கான இடம் கிடைக்கவில்லை எனவும், 

அதற்கு மாகாண சபை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர். வரலாற்றில் இடம்பிடித்த குறித்த போட்டியில் பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தமை குறிப்பிடதக்கதாகும்.

இன்று இடம்பெற்ற போட்டியில்,

அ பிரிவு

முதலாமிடம் - யாழ்ப்பாணம் சங்குவில் 

இரண்டாம் இடம் - கிளிநொச்சி பன்னங்கண்டி

மூன்றாம் இடம் - கிளிநொச்சி பன்னங்கண்டி

நான்காம் இடம் - யாழ்ப்பாணம் சங்குவில்

ஆ பிரிவு

முதலாமிடம் - யாழ்ப்பாணம் அளவட்டி

இரண்டாம் இடம் - முல்லைத்தீவு விசுவமடு

மூன்றாம் இடம் - கிளிநொச்சி முட்கொம்பன்

நான்காம் இடம் - யாழ்ப்பாணம் கொடிகாமம்

இ பிரிவு

முதலாமிடம் - யாழ்ப்பாணம் மட்டுவில்

இரண்டாம் இடம் - முல்லைத்தீவு தேராவில்

மூன்றாம் இடம் - கிளிநொச்சி வட்டக்கச்சி

நான்காம் இடம் - யாழ்ப்பாணம் விழான்

ஈ பிரிவு

முதலாமிடம் - முல்லைத்தீவு ரெட்பான

இரண்டாம் இடம் - யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை

மூன்றாம் இடம் - கிளிநொச்சி வட்டக்கச்சி

நான்காம் இடம் - கிளிநொச்சி பூநகரி

உ பிரிவு

முதலாமிடம் - கிளிநொச்சி முட்கொம்பன் கிளி

இரண்டாம் இடம் - யாழ்ப்பாணம் நீர்வேலி

மூன்றாம் இடம் - கிளிநொச்சி கண்ணகிபுரம் கிளி

நான்காம் இடம் - கிளிநொச்சி முட்கொம்பன்  ஆகிய இடங்களை பெற்றுக்கொண்டன.