எதிர்வரும் ஆசிய கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கு கிடைத்த வாய்ப்பை அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலக கோப்பையில் விளையாடும் அணியில் இடம்பெறுவதற்காக பயன்படுத்தப்போவதாக இலங்கையின் சகலதுறை வீரர் தில்ருவான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஒருநாள் அணியில் எனது இடத்தை உறுதி செய்ய விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ணப்போட்டிகளில் விளையாட கிடைத்த வாய்ப்பை நான் தவறவிட விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் இதற்காகவே காத்திருந்தேன் இதனால் நான் மகிழ்;ச்சியடைந்துள்ளேன் என தெரிவித்துள்ள தில்ருவான் பெரேரா தெரிவுக்குழுவினருக்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்கவேண்டும் இதற்காகவே அவர்கள் என்னை தெரிவு செய்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஓவ் ஸ்பின் மற்றும் ஆர்ம்போல் பந்துகளை வீசுகின்றேன்,ரங்கன ஹேரத்தை எடுத்துக்கொண்டால் கூட அவரிடம் பலவகையான பந்துவீச்சு முறைகள் இல்லை ஆனால் பந்தை தொடர்;சியாக துல்லியமாக வீசுவார் அவரின் வெற்றிக்கு அதுவே காரணம்  உங்களுக்கு பலவகையான பந்துகளை வீச தெரிந்திருக்கலாம் ஆனால் துல்லியமாக வீச முடியாவிட்டால் உங்களால் தாக்கம் செலுத்த முடியாது எனது அனுபவம் எனக்கு இந்த விடயத்தில் கைகொடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அணித்தலைவர் மத்தியுஸ் தில்ருவான் பெரேராவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவரின் அனுபவம் காரணமாக அவரால் எந்த அணியிலும் விளையாட முடியும் உலக கிண்ணத்திற்கான எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் உள்ளார் என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.