(நா.தினுஷா) 

அந்நிய செலாவணி அதிகரித்துள்ளதாக மார்த்தட்டிக்கொள்ளும் நல்லாட்சி அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவோ அவற்றை தீர்க்கவோ முயற்சிக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துனெத்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

வெளிநாடுகளுக்கு பணிப் பெண்களாக செல்லும் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன் கருதி கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட வெளிநாடு செல்வதற்கு காணப்பட வேண்டிய குடும்ப தகைமைகள் மற்றும் தகுந்த பத்திரங்கள் போன்றவற்றில் காணப்படுகின்ற வரையறைகளை அரசாங்கம் நீக்கி, அதன் மூலம் இலாம் சம்பாதிக்கவே முயல்கிறது.

மேலும் வெளிநாடுகளுக்கு சென்று தொழில் புரியும் பணியாளர்களுக்கு தொழிற்சான்றிதல்களை பெற்றுக்கொடுக்கவோ, சைப்ரஸ் நாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களின் பிரச்சிகைனகளுக்க தீர்வு பெற்றுகொடுக்கவோ, அல்லது அவர்களுக்கூன ஓய்வூதியத்தை பெற்றக்கொடுக்கவோ, வாக்குரிமையை பெற்றுக்கொடுக்கவோ அரசாங்கம் முயற்சிப்பதில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.