(எம்.மனோசித்ரா)

மின்சாரம், குடிநீர் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகளில் பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பொது மக்களிடம் ஆலோசனை கேட்கும் தேசிய திட்டமிடல் வேலைத்திட்டத்தினை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. 

பாவனையாளர்களான பொது மக்களிடமே அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொண்டு அதன் மூலம் அவர்களுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் பற்றி ஆராய்வதே இதன் பிரதான நோக்கமாகும். 

பொது மக்களிடம் ஆலோசனை கேட்கும் இவ்வேலைத்திட்டம் 9 மாகாணங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதற்கு இனங்க இது வரையில் 4 மாகாணங்களில் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆலோசனைக் கூட்டம் வட மாகாணத்தில் இம் மாதம் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இவ் ஆலோசனைக் கூட்டத்தில் பொது மக்கள் நேரடியாகச் சென்று சந்தித்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.