தெற்கு சூடான் நாட்டின் தலைநகரான ஜுபாவிலிருந்து இன்று ஈரோல் நகரை நோக்கி பயணித்த  விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு சூடான் நாட்டின் தலைநகரான ஜுபாவில் இருந்து 24 பயணிகளுடன் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இன்று ஈரோல் நகரை நோக்கி புறப்பட்டு சென்றது.

செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஈரோல் நகரின் அருகே ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த 21 பேரின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில். 6 வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.