(இரோஷா வேலு) 

நொச்சியாகம பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவாவ அல்மில்லகுலம பகுதியில் வைத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய அமைவாக மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே நொச்சியாகம மற்றும் ராஜாங்கனையைச் சேர்ந்த 18 முதல் 38 வயதுக்குட்பட்ட எட்டு ஆண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, இவர்கள் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர்களை இன்று நொச்சியாகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்களை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார்.