(எம்.எம்.மின்ஹாஜ்)

மாகாண சபை தேர்தலே அடுத்ததாக நடைபெறவுள்ளது. ஆகவே அதற்கு நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அதற்கு துரிதமாக நாம் தயாராக வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கண்டி சிங்கள வர்த்தக சங்க சம்பத் கட்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்த அவர்,

உள்ளூராட்சி தேர்தலின் தோல்வியை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். தற்போது மக்களின் கோரிக்கைக்கு அமைவாக நாம் மாற்றம் கண்டு வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி கொடுத்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி 2003 ஆம் ஆண்டை போன்று எதிரணிக்கு நாட்டை ஒப்படைக்கவா என சிலர் எண்ணுகின்றனர். 

ஆனால் அதற்கு இம்முறை நாம் இடமளிக்கப் போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.