ஐபோன் வாங்குவதற்காக பிறந்து 18 நாட்களே ஆன குழந்தையை விற்ற தந்தைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சீனாவின் புகியான் மாகாணத்தைச் சேர்ந்தவர் டுவான். இவரது மனைவி ஜியாவ் மெய். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் டுவானுக்கு ஐபோன் வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை.

ஆனால் அதற்கு போதிய பணம் இல்லாததால் கவலையில் இருந்தார். 

இந்நிலையில் அவருக்கு புதிய யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி பிறந்து 18 நாட்களே ஆன தனது குழந்தையை இணையம் மூலம் ஒருவருக்கு 2 இலட்சத்துக்கு விற்பனை செய்தார். 

பின்னர் குழந்தையை வாங்கிய நபர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் தெரிவித்தார். 

இதையடுத்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து டுவானை கைது செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டுவானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.