பாதையை புனரமைக்க கோரி கொட்டகலையில் ஆர்ப்பாட்டம்

Published By: R. Kalaichelvan

09 Sep, 2018 | 12:36 PM
image

 வீதியை புனரமைத்த தருமாறு கோரி அந்தோணிமலை தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அட்டன் – கொட்டகலை 60 அடி பாலத்திலிருந்து அந்தோணிமலை வரையான சுமார் 05 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பிரதான பாதையை புனரமைத்து தருமாறு கோரி குறித்த தோட்ட மக்கள் இன்று காலை 09 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

அந்தோணிமலை தோட்ட பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பதாதைகளை ஏந்தி, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

பல வருடகாலமாக புனரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் பாதை எது குழி எது என்று தெரியாத அளவிற்கு பாதை குன்றும் குழியுமாக காணபடுகின்றது.இப்பாதையினை அந்தோணிமலை, கவாலமலை, கல்கந்தை, பளிங்குமலை, யதன்சைட் போன்ற தோட்டங்களை கொண்ட 500 இற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பாதை சீர்கேட்டினால் இத்தோட்ட மக்கள் கால் நடையாக நகரத்திற்கு செல்வதோடு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாகன வசதிகள் இல்லாமல் தலையில் சுமந்து செல்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மழைக்காலங்களில் இப்பாதையை பயன்படுத்த முடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை பாடசாலை மாணவர்கள் இப்பகுதியை கடக்கும் போது தங்களின் பாதனிகளை கழட்டிக்கொண்டு செல்லும் அவலநிலை பல வருடங்களாக இடம்பெறுவதாக மாணவர்கள் புலம்புகின்றனர்.

இத்தோட்டத்தில் உள்ள நோயாளர்கள் மற்றும் தாய்மார்கள் வைத்தியசாலைக்கு செல்வதாக இருந்தால் வாகன வசதிகள் இன்றி நடந்துச்செல்லவேண்டும்.

இப்பாதையினை புனரமைத்து தருமாறு பல அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் கோரியபோதிலும் இதுவரை எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே இப்பாதையினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக செப்பணியிட்டு தருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41