கம்பளை, குருந்து வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குரு தோட்டப் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையொன்றின் சடலத்தை வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆறு அடி நீளம் கொண்ட குறித்த சிறுத்தை புலியின் தலையை துண்டித்தே சந்தேக நபர்கள் சிறுத்தையை கொலை செய்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸாரும், வனவிலங்கு அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.