ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்கள் தொடர்பில் தமிழக அமைச்சரவை இன்று முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஏழு தமிழர்கள் தொடர்பில் முக்கிய முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பில்  தமிழக அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த தீர்ப்பின் பின்னர் தங்களை விடுதலை செய்யவேண்டும் என கோரி ஏழு தமிழர்களும் தங்கள் வழக்கறிஞர் மூலமாக தமிழக அரசிற்கு கடிதமொன்றை வழங்கியுள்ளனர்.

இந்த கடிதத்தை தமிழக அரசிடம் வழக்கறிஞர் புகழேந்தி சமர்ப்பித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று விடுமுறை தினம் என்ற போதிலும் முக்கிய தீர்மானத்தை எடுப்பதற்காக தமிழக அமைச்சரவை கூடுகின்றது.

இன்றைய அமைச்சரவையின் முக்கிய நோக்கம் ஏழு தமிழர்கள் விடுதலைதான் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.