இந்தியாவில், ஈரோடு மாவட்டத்தில் இலங்கை அகதி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

அரச்சலூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி கலாநி கர்ப்பமுற்று, தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

காலாநிக்கு ஸ்கேன் செய்த வைத்தியர்கள் 3 குழந்தைகள் இருப்பதாக கூறினர். பின்னர் அவருக்கு முதலில் ஒரு குழந்தை சுகப்பிரசவம் ஆனது. பின்னர், வைத்தியர்கள் அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது. அப்போது அடுத்தடுத்து 3 குழந்தைகளை கலாநி பெற்றெடுத்தார்.

அவருக்கு, 2 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் என 4 குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்ததை அறிந்த கணவர் விஜயகுமார் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளமை குறிப்பிடதக்கது.