வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் 11 ஆம் திகதி வரை பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். அதனால் பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் நாட்டின் கடற்பிராந்தியங்களை பொருத்தவரயைில் மாத்தறை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலயத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகரித்து விசக்கூடுவதனால் கடற்பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும்.