கடந்த ஒரு தசாப்தமாக அகர்வூட் செய்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துவரும் சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனம், சுற்றுச்சூழலுக்கும், முதலீட்டாளருக்கும் அனுகூலங்களை வழங்கக்கூடிய வகையிலான பாதுகாப்பான வணிக நோக்கிலான வனவியல் முதலீடுகளை வழங்கி வருகிறது.

நிலையான முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பது தொடர்பான புரிதலை கொண்டுள்ள சதாஹரித பிளாண்டேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சதீஷ் நவரத்ன கருத்து தெரிவிக்கையில், “எமது மக்களுக்கும், உள்நாட்டு பொருளாதாரத்திற்கும் நன்மையளிக்கக்கூடிய ஏதேனுமொன்றை ஆரம்பிப்பதற்கும்,  நம்பிக்கையான மற்றும் நிச்சயமாக அனுகூலமிக்க சகாயமான உற்பத்தியை வழங்குவதற்குமான ஆர்வம் என்னிடம் காணப்பட்டது” என்றார்.

தேசிய வனவியல் மற்றும் விவசாயம் தொடர்பான அறிவு மற்றும் சூழலை பாதுகாப்பதற்கான தேவை போன்றவற்றிற்கு இவர் எப்போதும் முன்னுரிமை அளித்திருந்ததுடன், அதனை பூர்த்தி செய்யும் வர்த்தக மாதிரியை கண்டறிவதிலும் முக்கியத்துவம் செலுத்தியிருந்தார். 

அகர்வூட்டின் கவர்ச்சிகரமான பண்புகள் குறித்து நவரத்ன மேலும் தெரிவித்ததாவது, “மத்திய கிழக்கு நாடுகளை பொறுத்தவரை இது அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. பெரும்பான்மையாக செல்வம் மற்றும் அந்தஸ்தினை வெளிப்படுத்தும் அளவுகோலாகவும், வீடுகளில் வாசனைத்திரவியமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் வளர்ந்துவரும் அழகுசாதன துறை காரணமாக, உலகின் தலைசிறந்த வர்த்தகநாமங்கள் தமக்கான உற்பத்திகளில் பிரத்தியேகமான நறுமணத்தை உருவாக்குவதற்கான பிரதான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதால் இம்மரத்திற்கு அதியுயர் கேள்வி நிலவுகிறது” என்றார்.  

மேலும் இம்மரங்கள் சவர்க்காரங்கள், சமய நிகழ்வுகளுக்கான ஊதுபத்திகள் உற்பத்திகளில் பயன்படுத்தப்படுவதுடன், பெரும் செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் உற்பத்தியாக நம்பப்பட்டு வருவதால் இதில் ஆபரணங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

“அகர்வூட்டின் வலுவான சந்தை பெறுமதி குறித்து வலியுறுத்திய நவரத்ன “மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் உற்பத்தி செய்யப்படும் சுமார் 1.2 பில்லியன் டொலர் பெறுமதியான அகர்வூட்டினை வருடந்தோறும் சிங்கப்பூர் ஏற்றுமதி செய்து வருகிறது. உலகம் முழுவதும் 12 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி கொண்ட துறையாக அகர்வூட் விளங்குகிறது” என நவரத்ன குறிப்பிட்டார். 

ஈடிணையற்ற நிபுணத்துவத்தை வழங்கக்கூடிய திறனை கொண்டுள்ள இலங்கையின் ஒரேயொரு வனவியல் முதலீட்டு நிறுவனம் சதாஹரித பிளாண்டேஷன் ஆகும். “முடிந்தவரை அதியுயர் திரும்பல்களை எமது வாடிக்கையாளருக்கு திருப்பியளிப்பதற்காக எமது நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது” என்றார்.

அறுவடைக்காக வெறும் 40,000 ரூபா மாத்திரமே செலவு செய்து ஒரு மரத்திலிருந்து சுமார் 100,000 ரூபா வரையான இலாபத்தை ஈட்டிக்கொள்ள முடியும் என்பதை எமது ஆராய்ச்சிகள் ஊடாக நாம் கண்டறிந்துள்ளோம். எனினும், குறிப்பிட்ட காலப்பகுதிக்கு நாம் வழங்கும் குறைந்தபட்ச மீள்பெறல் ஏனைய வங்கிகளை காட்டிலும் அதிகமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

எமது வாடிக்கையாளர்களின் உற்பத்திகளை Wescorp அவுஸ்திரேலியாவுக்கு விற்பனை செய்து வருகிறோம். எமது வாடிக்கையாளருக்கு சிறப்பானதை வழங்கவும், உலகம் முழுவதும் இந்த உற்பத்தியை விற்பனை செய்வதையும் உறுதி செய்யும் வகையில் இதனை சவாலாக ஏற்றுக்கொண்டுள்ளோம். 

வர்த்தக ரீதியான அகர்வூட் உற்பத்திக்கான பிரத்தியேக காப்புரிமையை சதாஹரித கொண்டுள்ளது. இலங்கையில் CA-kit இன் காப்புரிமையாளராக நாம் உள்ளதுடன், இந்த தொழில்நுட்பத்தை மேலாண்மை மற்றும் கையாள்வதற்கான திறனை நாம் கொண்டுள்ளோம்” என்றார்.

இன்று இந்த நிறுவனம் 1200 ஏக்கர் விவசாய முதலீடுகளை கொண்டுள்ளதுடன், நாடுமுழுவதும் 23,000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அதன் செயற்பாடுகளுக்கு சாட்சியமாக விளங்கின்றனர். 

இந்த நிறுவனத்தின் வெற்றி குறித்து பெருமையுடன் கூறிய நவரத்ன, “இந்த 14 ஆண்டுகாலத்தில் தேசிய வனவியல் விருதுகள் வெற்றியாளராக நாம் உள்ளோம். எமது வாடிக்கையாளர்களின் சந்தோஷம் மற்றும் திருப்தியே எமது வெற்றிக்கு பெரும் பங்களிப்பு வழங்கியுள்ளது. 

தெற்காசியாவில் சிறப்பான வனவியல் இனப்பெருக்க நிலங்களை நாம் கொண்டுள்ளதுடன், நாடுமுழுவதும் உள்ள 800 இற்கும் மேற்பட்ட எமது பணிப்பாளர்கள் எமது வாடிக்கையாளர்களையும், அவர்களது முதலீடுகளையும் மேலாண்மை செய்து வருகின்றனர். இதுவே எமது சக்தி என நான் நம்புகிறேன்” என்றார்.