நேபாளத்தின் காட்டுப் பகுதியில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி 7 பேர் பலி?

Published By: Digital Desk 4

08 Sep, 2018 | 04:28 PM
image

நேபாளம் நாட்டின் காத்மாண்டு நகரில் இன்று 7 பேருடன் பயணித்த தனியார் ஹெலிகொப்டர் காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளம் நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து ஆல்ட்டிடியூட் ஏர் என்னும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் இன்று காலை 8 மணியளவில் புறப்பட்டு சென்றது.

சுமார் 20 மைல் தூரம் கடந்து சென்றதும் காத்மாண்டு விமான நிலையத்தில் உள்ள தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அறையுடனான இணைப்பை அந்த ஹெலிகொப்டர் இழந்த நிலையில், தாடிங் மற்றும் நுவக்கோட் மாவட்டங்களுக்கு இடையிலான காட்டுப்பகுதியில் அந்த ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். 

கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5500 அடி உயரத்தில் உள்ள அந்த காட்டுப்பகுதிக்கு மீட்பு குழுவினர் செல்ல முடியாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. 

அந்த ஹெலிகொப்டரில் ஒரு நோயாளியும் கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ள நிலையில் அதில் சென்றவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47