எனது இறுதி டெஸ்டில் அரைசதம் பெற்றது குறித்து மகிழச்;சியடைந்துள்ளேன் அதேவேளை இன்னமும் அதிக   ஓட்டங்களை பெறாதது ஏமாற்றமாகவும் உள்ளது என அலைஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிடெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலைஸ்டர் குக் துடுப்பெடுத்தாடுவதற்காக மைதானத்திற்குள் நுழைந்தவேளை இந்திய அணியினர் அவரிற்கு மரியாதை அணித்தனர்

இது குறித்தும் குக் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்கு காரணமாக நான் ஓட்டங்களை பெறவேண்டும் என விரும்பினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனக்கு இந்திய அணியினர்  மரியாதை வழங்கியது சிறந்த விடயம்,ஆனால் நீங்கள் துடுப்பாட்டம் குறித்து கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என தெரிவித்துள்ள குக் முதல் போட்டியாகயிருந்தாலும் இறுதிப்போட்டியாகயிருந்தாலும் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தவேண்டியது முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு கிடைத்த மரியாதை மற்றும் வரவேற்பு காரணமாக நான் துடுப்பாட்டத்தில் இன்னமும் அதிகமாக கவனம் செலுத்தினேன் எனவும் குக் தெரிவித்துள்ளார்.