இரணைத்தீவில் நேற்று கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் இரணைதீவுக்கு இடது புறமாக கடலில் மிதந்து வந்த 284.50 கிலோ கிராம் கஞ்சா கடற்ப்படையினரால் மீட்க்கப்பட்டு கிளிநொச்சி முழங்காவில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படாத நிலையில் வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றோசான் பெர்னாண்டோ,  கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்ன,பொலிஸ் அத்தியட்சகர் சமுத்திரயிவ,உதவிப்  பொலிஸ் அத்தியட்சகர் கொடித்துவக்கு ஆகியோரின் பணிப்பின் பெயரில்  முழங்காவில் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி ருக்மால் ரத்னாயக்க தலைமையிலான குழுவினர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட  கஞ்சாவினை எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.