தனது ஞாபக மறதியால் அப்பாவி இளைஞரை சுட்டு கொன்ற பெண் பொலிஸ் அதிகாரி (வீடியோ இணைப்பு)

Published By: Digital Desk 4

08 Sep, 2018 | 12:03 PM
image

அமெரிக்காவில் தனது குடியிருப்பு என தவறாக நினைத்து வேறு ஒருவரின் குடியிருப்புக்குள் புகுந்து  பெண் பொலிஸ் அதிகாரி அங்கிருந்தவரை சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகர பொலிஸில் பணிபுரிந்து வரும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது வீட்டிற்கு திரும்பினார். அவர் டல்லாஸ் நகர் அருகே குடியிருப்பு வளாகம் அமைந்த பகுதிக்கு சென்றார். ஆனால் தவறுதலாக 26 வயதான போத்தம் ஷேம் ஜீன் என்பவரது வீட்டிற்குள் சென்றுள்ளார். 

அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் குறித்த பொலிஸ் அதிகாரி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் போத்தம் ஷேமை சுட்டதில் ஷேம் உயிரிழந்தார்.

இதன்பின் தகவல் அறிந்து அங்கு சென்ற பொலிஸாரிடம் அந்த பெண் பொலிஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்தியபொழுது, எனது குடியிருப்பு என நினைத்து உள்ளே நுழைந்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.

பெண் பொலிஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் மரணமடைந்த ஷேம் கரீபியன் தீவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர் எனவும் தனியார் கிறிஸ்தவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு டல்லாஸ் நகரில் உள்ள கணக்கியல் துறை சார்ந்த நிறுவனம் ஒன்றில் ஷேம் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினை அடுத்து, பெண் பொலிஸ் அதிகாரியின் இரத்தம் சேகரிக்கப்பட்டு மதுபானம் எதுவும் குடித்துள்ளாரா? என அறிவதற்காக சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

பெண் பொலிஸ் அதிகாரியின் இந்த கொடூர செயலைக் கண்டித்து காவல்துறை தலைமையகம் முன்பு ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47