அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா  டிரம்பின் அரசாங்கத்தின் காணப்படும் அச்சம் மற்றும் வெறுப்பு கலாச்சாரத்தை கடுமையாக சாடியுள்ளார்.

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னர்  முதல்தடவையாக நீண்டஉரையொன்றை ஆற்றியுள்ள பராக்  ஒபாமா  அமெரிக்க வாக்காளர்களை அமெரிக்காவில் சிறந்த ஜனநாயகமொன்றை கட்டியெழுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

டிரம்பும் குடியரசுக்கட்சியினரும் வோசிங்டனில் பயன்படுத்துகின்ற தந்திரோபாயங்கள் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு ஆபத்தானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அச்சத்தை தூண்டுவது,ஒரு பிரிவை மற்றொரு பிரிவினருக்கு எதிராக தூண்டிவிடுவது,எங்களை போல இல்லாதவர்களால் பாதுகாப்பிற்கு ஆபத்து என பிரச்சாரம் செய்வது, போன்ற கலாச்சாரம் காணப்படுவதாக தெரிவித்துள்ள டிரம்ப் இது டிரம்புடன் ஆரம்பமாகவில்லை அவர் நோய்க்கான ஒரு அறிகுறி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் பல வருடங்களாக தூண்டிவந்த வெறுப்பினை டிரம்ப் பயன்படுத்துகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் ஜனநாயகத்தில் வெற்றிடம் நிலவும்போது நாங்கள் வாக்களிக்காத போது  எங்கள் அடிப்படை உரிமைகள் சுதந்திரத்தை அலட்சியம் செய்யும்போது  அச்சம் மற்றும் வெறுப்புணர்வு அரசியல் வேர்கொள்கின்றது எனவும்  ஒபாமா தெரிவித்துள்ளார்.