சாவகச்சேரி நகரசபை அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்

Published By: R. Kalaichelvan

08 Sep, 2018 | 12:02 PM
image

சாவகச்சேரி நகரசபையின் உபதலைவர் அ.பாலமயூரன் மற்றும் நகராட்சி மன்ற உத்தியோகத்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை மீசாலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்ணணி அலுவலகம் அமைந்துள்ள காணியில் நகராட்சி மன்றம் அனுமதியின்றி சட்ட விரோதமாக மதில் அமைக்க முற்பட்டுள்ளனர். 

இன்று விடுமுறை தினமாகையால் இது தொடர்பாக பொதுமக்கள் உப தவிசாளரிடம் முறையிட்டுள்ளனர்.

 உடனடியாக உபதவிசாளர் உரிய அதிகாரிகளுடன் சட்டவிரோத மதில் அமைக்கப்படுகின்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்துக்கு  விரைந்துள்ளார். 

அங்கு மதில் அமைக்க முற்பட்டவர்களிடம் சட்டவிரோதமாக மதில் அமைக்க வேண்டாம் என்றும் நகராட்சி மன்றின் கட்டட அமைப்பதற்கான உரிய அனுமதிகளைப் பெற்று அமைக்குமாறும் அதுவரை மதில் அமைப்புப்பணிகளை நிறுத்தி வைக்குமாறும் நகராட்சி மன்ற அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத மதில் அமைப்பில் ஈடுபட்டவர்கள் நாங்கள் மதிலை இப்பொழுதே கட்டுவோம் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என தகராறில் ஈடுபட்டு தாக்க முற்பட்டுள்ளனர். 

இதன்போது நிலைமையின் விபரீதத்தினை உணர்ந்த உபதவிசாளர் உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 

உடனடியாக அப்பகுதிக்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தி நகராட்சி மன்றின் நடைமுறைகளை பின்பற்றுமாறு தெரிவித்துள்ளனர்.

 இந்த அச்சுறுத்தல் தொடர்பாக உபதலைவர் பாலமயூரனின் உத்தரவின் படி நகராட்சி மன்ற அதிகாரிகளால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18