வவுனியாவில் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் நேற்று இரு வீட்டுத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

116 மற்றும் 117 வது மாதிரிக் கிராமங்களாக அமைக்கப்பட்ட வீமன்கல்லு மற்றும் வவுனியா வடக்கு சிவாநகர் ஆகியவையே பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

வீமன்கல்லு கிராமத்தில் 12 வீடுகளும், சிவாநகரில் 12 வீடுகளுமாக 24 வீடுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் வாழ்வாதார உதவித்திட்டங்கள், தொழில் முயற்சியாளர்களுக்கான பொருட்கள், கடன் திட்டங்கள் மற்றும் இலவச மூக்குகண்ணாடிகள் என்பனவும் இதன்போது வழங்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் உபதலைவர் சு.குமாரசாமி, வவுனியா வடக்கு பிரதேச சபையின் உபதலைவர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.