(எம்.எப்.எம்.பஸீர்)

தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலரும் இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் மேன் முறையீட்டு நீதிமன்ற அழைப்பாணை பிரகாரம் இன்றுஅவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜரான பின்னர் வெளியேறிச் செல்கையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.