கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடிக்கும் படத்திற்கு பேட்ட என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரையும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று மாலை வெளியிட்டிருக்கிறது.

காலா படத்திற்கு பிறகு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார். பெயரிடப்படாமல் தொடங்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மோஷன் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘பேட்ட’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரஜினி ரசிகர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 6 மணியளவில் வெளியான் இந்த டைட்டிலும், மோஷன் போஸ்டரும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பொபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கிறர்கள். அனிரூத் இசையமைக்கும் இந்த படத்திற்கு திருநாவுக்கரவு ஒளிப்பதிவு செய்கிறார்.