தெரணியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நூரி தோட்ட உயர் அதிகாரி ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

குறித்த தோட்ட உயர் அதிகாரி அடியாட்களுடன் லயன் குடியிருப்பொன்றில் கடந்த 05 ஆம் திகதி அத்துமீறி நுழைந்து தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த ஒருவர் தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவிசாவலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே நூரி தோட்ட மக்கள், தோட்ட உயர் அதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தெரணியகல பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்களை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.