(நா.தினுஷா) 

இலங்கையில் கடந்த 12 மாதங்களுக்குள் 43.8 வீதமான சிறுவர் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதில் 54.9 வீதமான வன்முறை சம்பவங்கள், ஆண் சிறுவர்களுடன் தொடர்ப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 13 தொடக்கம் 15 வயது வரையான  சிறுவர்களே  துன்புறுத்தல்களால் அதிகளவில் பாதிப்படைவதாகவும் உலகளாவிய ரீதியில் சுமார் 150 மில்லியனுக்கு அதிகமான சிறுவர்கள் பாடசாலைகளிலும் அதனை சுற்றியுள்ள சூழல்களில் காணப்படும் துன்புறுத்தல்களால் பாதிப்படைதாகவும் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.