பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவை உடனடியாக பொதுவேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டு எதிரணியின் எதிர்ப்பு பேரணியை தொடர்ந்து, எதிரணியின் சில உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளனர்.

இதன்போது, எதிர்ப்பு பேரணி பெரியளவில் வெற்றிப்பெறவில்லை எனவும் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர்.

கூட்டு எதிரணியில் உள்ள பசில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் சிலரே ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லை. எனினும் இந்த பாரிய மக்கள் கூட்டத்தை கண்டு அரசாங்கம் அச்சமடைந்துள்ளது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 அடுத்து ஜனாபதி தேர்தலில் களமிறங்குவது தொடர்பாக எண்ணம் இருந்தால் உடனடியாக பசில் ராஜபக்ஷவை பொதுவேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கூட்டு எதிரணியினர் சில கூறிய போது, பொதுவேட்பாளர் யார் என்பதை அவசரமாக அறிவிக்க வேண்டிய தேவை தற்போது கிடையாது என மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்