எதிர்வரும் காலங்களில் அலரிமாளிகையில் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மூத்த புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான சத்துர சேனாரத்னவின் திருமண நிகழ்வு அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

சத்துர சேனாரத்னவின் திருமணம் தொடர்பில் மஹிந்த தரப்பினர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்தனர்.

 ஆனால் ‘அங்கீகரிக்கப்பட்ட சில விதிமுறைகளுக்கு அமையவே, அதாவது வெளிவாரியான நிகழ்வுகளுக்கு வழங்கப்படுகின்ற கட்டணங்களுக்கு அமையவே குறித்த திருமண நிகழ்வு நடத்தப்பட்டது என பிரதமர் அலுவகம் அறிவித்திருந்தது.

மேலும் குறித்த திருமண நிகழ்வுக்காக அலரிமாளிகைக்கு 21 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டமை தொடர்பான காசோலை வழங்கப்பட்ட தகவல்களும் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் திருமண நிகழ்வுகளை அலரிமாளிகையில் நடத்தப்போவதில்லை என பிரதமர் அறிவித்துள்ளார்.