ஈராக்கில் மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கள் அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது  நன்றாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும்,ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பாஸ்ரா நகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த இவ் ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கும்,பாதுகாப்பபு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில்  8 பேர் உயிர்ழந்துள்ளதுடன்,பலர் படுகாயம் அடைந்நததாக அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொது மக்கள் பெற்றோல்,கற்களை எறிந்த காரணத்தினால் அப்பகுதி பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு ஏற்பட்ட மோதலில் பாரிய அளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.