பிரேஸில் ஜனாதிபதி தேர்தலின் முன்னணி வேட்பாளர்களில் ஒருவரான ஜார் போல்சேனர்ரூ மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெராய்ஸ் ஜூய்ஸ் டி ஃபோரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையின் போதே இந்த கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட காணொளிப் பதிவுகளிள், போல்சேனார்ரூ கை கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டுவதையும், கத்தியால் குத்தப்பட்டபோது, ஆதரவாளர்களால் அவர் தூக்கி உயர்த்தப்படுவதையும் அதன் பின்னர் வலியால் துடித்தவுடன், அவரை கீழிறக்கிய ஆதரவாளர்கள் அவரை காரில் ஏற்றி செல்வதும் பதிவாகியுள்ளது.

தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பிறகு,

இந்த காயம் மேலோட்டமானது என்று ஆரம்பத்தில் டுவிட்டரில் பதிவிட்ட அவரது மகன் ஃபிலாவியோ, 2 மணிநேரத்திற்கு பின் "எதிர்பார்க்கப்பட்டதை விட இந்த கத்திக்குத்தால் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது" என்றும் தெரிவித்துள்ளார், 

எவ்வாறிருப்பினும் கல்லீரல் மற்றும் குடல் காயங்களுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஜார் போல்சேனர்ரூவின்  உடல்நிலை, தற்போது சீராக இருப்பது தெரியவந்துள்ளது. 

சோசியல் லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிடும் 63 வயதான போல்சேனார்ரூவை சமூக வலைதளங்களில் மில்லியன்கணக்கான பிரேசிலியர்கள் பின் தொடரப்படுவதுடன் பலரும் அவரை "பிரேசிலின் டிரம்ப்" என்று வர்ணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.