விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான விலையினை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி ஒரு கிலோகிரோம் நாடு மற்றும் சம்பாவுக்கான விலை இரண்டு ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் இதற்கான அனுமதிப்பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஒரு கிலோ நாட்டரிசி நெல்லுக்கான விலை 38 ரூபாவிலிருந்து 40 ரூபா வரைக்கும் சம்பா ஒரு கிலோ நெல்லுக்கான வில‍ை 41 ரூபாவிலிருந்து 43 ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.