பிரேமதாசவின் கனவு விரைவில் முழுமை பெறும் - அகிலவிராஜ்

Published By: Vishnu

07 Sep, 2018 | 08:04 AM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி பதவி ஐக்­கிய தேசிய கட்­சிக்கே சொந்­த­மாகும்.முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் கனவு இன்று நிறை­வே­றி­னாலும் அது முழுமைப் பெற­வில்லை என ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர்   அகிலவிராஜ் காரி­ய­வசம்  தெரி­வித்தார். 

ஐக்­கிய தேசிய கட்­சியின் 72 ஆவது வருட நிறைவு நிகழ்வு நேற்று கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் பிர­தமர் தலை­மையில்  இடம்பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்துகொண்டு கருத்­து­ரைக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு   குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

பல போராட்­டங்­களின் மத்­தியில் ஐக்­கிய தேசிய கட்சி 72 வரு­டங்­களை கடந்­துள்­ளது. ஆகவே மஹிந்த தரப்­பினர் அர­சாங்­கத்­திற்கு  எதி­ராக மேற்­கொள்ளும் போலி­யான போராட்­டங்கள் ஒன்றும்  எமக்கு சவா­லானதல்ல. 2015 ஆம் ஆண்டில் இருந்தே  கூட்டு எதி­ர­ணி­யினர் போராட்­டங்­களை மாத்­தி­ரமே மேற்­கொண்­டுள்­ளனர். அதில் எவ்­வித மாற்­றங்­களும் இடம்பெற­வில்லை.

மக்கள் சக்தி என்ற பெயரில் மது­வினை வழங்கி மேற்­கொண்ட போராட்­டங்கள்  ஜன­நா­யக போராட்­ட­மாகி விடாது.  நேற்று  முன்­தினம் இடம்பெற்ற போராட்டம் கேலிக்­கூத்­தாக்­கப்­பட்­டுள்­ளது.பலர் வீதியில் மது­போ­தையில் புரண்­டுள்­ளனர். அர­சாங்கம் ஜன­நா­யக ரீதியில் போராட்­டங்­களை நடத்த அனு­மதி அளித்­துள்­ளது. போராட்­டங்­களின் பொழுது பலர் அநா­க­ரிக­மாக செயற்­பட்­டுள்­ள­மை­யினை சமூக வலைத்­த­ளங்­களில் காணக்கூடி­ய­தாக உள்­ளது.

தேசிய அர­சாங்­கத்தின் சிறந்த கொள்­கையின் கீழ்  முன்னாள் ஜனா­தி­பதி  ரண­சிங்க பிரேமதாசவின் கனவுகள் பாரியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அது முழுமை பெறவில்லை. அவரது கனவு முழுமை பெற வேண்டுமாயின் ஐக்கிய தேசிய கட்சியினர் அரச பலம் பொருந்தியவர்களாக தோற்றம் பெற வேண்டும். ஆகவே இவரது கனவு வெகுவிரைவில் நனவாக்கப்படும். 2020ஆம் ஆண்டு  ஜனாதிபதி பதவி எமக்கே  சொந்தமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42