வடக்கின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம்

Published By: Vishnu

06 Sep, 2018 | 11:32 PM
image

(எம்.நியூட்டன்)

வட மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவியினை இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ப்ரைஸ் ஹட்ச்சனை (Bryce Hutchesson) தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை, சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள ஆளுநரின் செயலகத்தில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சந்தித்து கலந்துரையாடியே போதே இதனை தெரிவித்த அவர்,

இலங்கையில் யுத்தத்தின் பின்னர் வட மாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சம்பந்தமாகவும் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் வடமாகாணத்தில் மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான பணிகளை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசு விருப்பம் கொண்டிருப்பதாகவும். விசேடமாக தமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் நவீன தொழில்நுட்பத்துடனான மழைநீர் மூலமான விவசாய நடவடிக்கையினை வடமாகாணத்தில் ஏற்படுத்துவதற்கு எண்ணியுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு ஆர்வம் கொண்டிருக்கின்றது.

மேலும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளை தமது அரசாங்கம் வடமாகாணத்தில் திறம்பட செயற்படுத்தி வருவது தொடர்பில் தெரிவித்த அவர் வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ளபோதும் மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களுக்கு அதிகளவான உதவிகளை கிடைப்பதற்கு வடமாகாணசபை நிதி ஒதுக்கீடு செய்ய ஆளுநர் பருந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இதற்கு ஆளுனர் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தயாராகவிருப்பதாக தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36