திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்திற்கு வடமாகாண பொலிஸாரால் இலவச சீருடைத்துணி  வழங்கிவைக்கப்பட்டுள்ளது 

இன்று காலை முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் கல்விகற்கின்ற மாணவிகள் எழுபத்தி ஐந்து பேருக்கு இலவச சீருடைத்துணிகள்  வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது 

இச் சீருடைகளை வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தனது சொந்த நிதியில் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது 

இந்நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாங்குளம் பொலிஸ் நிலைய பொலிஸார், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்