குழந்தையின் இறப்பை சகிக்க முடியாமல் குழந்தையின் தந்தை வைத்தியரை தாக்கிய சம்பவம் மன்னாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த நபரின் மனைவியான 33 வயதுடைய லசிக்கா என்பரே இன்று அதிகாலை ஆண் குழந்தையை பெற்றேடுத்துள்ளார்.

இவ்வாறு பெற்றக்குழந்தை இன்று காலை இறந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து குழந்தையின் தந்தையான முகமட்  றிவ்லான்  வைத்தியர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கியுள்ளார்.

மேலும் சம்பவத்தில் காயமடைந்த வைத்தியர்,வைத்திய உத்தியோகத்தர்கள்  சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளது.

எனினும் வைத்தியர் மற்றும் பாதுகாப்பு உத்தியோத்தர்களை தாக்கிய சம்வம் தொடர்பில் மன்னார் பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு  மன்னார் நீதாவன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இறந்த குழந்தையின் தாயின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் குழந்தையின் உடல், தாயின் (சிறிய தாய்) மூலமாக நீதவான் முன்னிலையில் அடையாளம் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.