பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதவான் கே. சிசிர டி ஆப்று, இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதவான் காமினி ரோஹன அமரசேகர ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.