சென்­னையில் இன்று அதி­காலை 26 நிமிடங்கள் சூரிய கிர­க­ணத்தை பார்க்க முடியும் பூமிக்கும் சூரி­ய­னுக்கும் இடையே சந்­திரன் செல்லும் போது சூரிய கிர­கணம் ஏற்­படும். அமா­வாசை தினத்­தன்று தான் சூரிய கிர­கணம் நிகழும். இதனால் சூரியன் முழு­வ­து­மா­கவோ அல்­லது பகு­தியாகவோ மறைக்­கப்­படும்.

பொது­வாக ஓராண்டில் 2 முதல் 5 சூரிய கிர­க­ணங்­கள்­ வரை நடப்­ப­துண்டு. சில ஆண்­டு­களில் சூரிய கிர­கணம் ஏற்­ப­டா­மலும் போகலாம்.

இந்­தி­யாவில் முழு சூரிய கிர­கணம் கடந்த 2010–ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 15 ஆம் திகதி ஏற்­பட்­டது. நடப்­பாண்டில் 2 சூரிய கிர­க­ணங்கள் ஏற்­பட உள்­ளன. அதன் முதல் சூரிய கிர­கணம் இன்று புதன்­கி­ழமை நிகழ்­கி­றது.

இந்­திய நேரப்­படி இன்று அதி­காலை 4.49 மணிக்கு சூரிய கிர­கணம் தொடங்­கு­கி­றது. இந்­தோ­னே­சியா மற்றும் பசிபிக் பெருங்­கடல் பகு­தியில் இந்த சூரிய கிர­கணம் 100 சத­வீதம் தெரியும்.

இந்­தி­யாவின் பெரும்பாலான பகு­தி­களில் பாதி சூரிய கிர­க­ணம்தான் தெரியும். இந்­தி­யாவின் மேற்கு, வட­மேற்கு பகு­தி­களில் இதை காண இய­லாது. சென்­னையில் காலை 6.22 மணிமுதல் 6.48 மணிவரை 26 நிமி­டங்கள் சூரிய கிர­க­ணத்தை பார்க்­கலாம்.

விசா­கப்­பட்­டி­னத்தில் 28 சத­வீதம், திரி­பு­ராவில் 15.1 சத­வீதம், அசாமில் 11 சத­வீதம், கொல்­கத்­தாவில் 18 சத­வீதம் புவ­னே­ஸ்­வ­ரத்தில் 24 சதவீதம், பாட்னாவில் 12 சதவீதம், போர்ட்பிளேயரில் 49 சதவீதம் சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.