இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டித் தொடர் நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. 

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியுடன்  மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு 20 போட்டித் தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இடம்பெற்ற ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது.

இதனையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில்  31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்ட வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றயீட்டி இந்திய அணியை தலை குணிய வைத்தது.

அதன் பின்னர் டிரென்ட் பிரிட்ஜில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு கடிவாளமிட்டு 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. 

அடுத்து சவுத்தாம்டனில் ஆரம்பமான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி 60 ஓட்டங்களில் வெற்றியீட்டி தொடரை 4:1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந் நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் பேட்டித் தொடர் நாளை ஆரம்பமாகிறது. 

டெஸ்ட் தொடரை இழந்ததால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று ஏற்பட்ட அவமானத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி உள்ளது.

அடுத்தபடியாக இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்டக்காரருமான குக்கின் இறுதி டெஸ்ட் போட்டி இது என்பதனால் இந்தப் போட்டியில் வெற்றியீட்டி குக்கை வெற்றிக் கழிப்புடன் வழியனுப்ப வேண்டும் என்ற நோக்குடன் இங்கிலாந்து அணியும் களம் புகுகின்றது.

நாளைய போட்டியின் போது இந்திய அணியில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு.  ஹர்த்திக் பாண்டியா இடத்தில் புதுமுக வீரர் ஷிகாரி இடம் பெறலாம் . அதேபோல் காயம் அடைந்த அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா இடம்பெறலாம் என்பதடன் லோகேஷ் ராகுல் ஒருவேளை நீக்கப்பட்டு பிரித்விஷா அணியில் இணைத்துக் கொள்ளப்படலாம்.