இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஹோட்டல் அறை ஒன்றில் பாயெல் சக்ரபோர்டி என்ற நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டலின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த அறையை சோதனை செய்த போது, மேற்குவங்காள மாநில நடிகையான பாயெல் சக்ரபோர்டி என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டுஹோட்டல் நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், பாயெல் நேற்று மாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த பொலிஸார் இளம் நடிகையின் மர்ம மரணம் குறித்து பல்வேறு வழிகளிலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.