தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளிற்கு எதிரான இந்திய அணியின் தோல்விகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை நிராகரித்து அணியின் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரி நிராகரித்துள்ளார்.

தற்போதைய இந்திய அணியுடன் ஒப்பிடும்போது முன்னைய இந்திய அணிகள் மோசமாகவே விளையாடியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெல்வதற்கான இந்த அணியின் திறமை குறித்து  எந்த சந்தேகமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று வருடகாலத்தில் நாங்கள் வெளிநாடுகளிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒன்பது டெஸ்ட்களில் வெற்றிபெற்றுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 15 இருபது வருடங்களில் வேறு எந்த அணியும் குறுகிய காலத்தில் இவ்வளவு சாதித்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார். அந்த அணிகளில் மிகச்சிறந்த வீரர்கள் இருந்தனர் எனவும் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் விளையாடி சொட்களையும் அவர் விமர்சித்துள்ளார்.

சொட்களை தெரிவு செய்யும் விதத்தில் முன்னேற்றம் அவசியம்,இரண்டாவது நாள் தேனீர் இடைவேளைக்கு பின்னர் நாங்கள் எங்கள் வலுவான நிலையை தொலைத்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி அந்த விடயத்தில் மேலும் சிறப்பாக செயற்படவேண்டும்,அணிக்கு என்ன அவசியம் என்பது பற்றிய தெளிவு முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்திய அணியின்  மனோநிலை உறுதியாகவேண்டும்,வெளிநாடுகளில் நாங்கள் அணிகளிற்கு சவால் விடுத்துள்ளோம் வெற்றிபெறும் நிலையை அடைந்துள்ளோம் என தெரிவித்துள்ள ரவிசாஸ்திரி எனினும் இனி வெற்றிபெறுவது குறித்து சிந்திக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.