சுதேச வைத்தியக் கண்டுபிடிப்புகளை வெளிக்கொனரும்  வைத்திய கண்காட்சியும் மாநாடும் திருகோணமலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் 5 ஆம் திகதிகளில் திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில்  இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபயகுணவர்த்தண தெரிவித்தார்.

இது தொடர்பாக திருகோணமலை வரோதய நகரில் உள்ள பிரதம செயலாளர் அலுவலக கலந்துரையாடல் மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபில் கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சும் கிழக்குப் பல்கலைக்கழக சித்த வைத்திய பீடமும் இணைந்து இந்த கண்காட்சியையும் மாநாட்டிணையும் நடாத்தவுள்ளனர்.

இவ்வூடக கலந்துரையாடலில் கிழக்கு மகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் என்.கனகசிங்கம் சுதேச வைத்திய திணைக்கள ஆணையாளர் திருமதி ஆர்.சிறிதரன் உட்பட பல அதிகாரிகளும் வைத்தியர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியின் போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வைத்திய துறை சார்ந்தவர்கள் தங்களது வைத்திய கண்டுபிடிப்புக்களை காட்சிப் படுத்துவார்கள் அத்துடன் சர்வதேச தரத்திலான வைத்திய முறைமைகளும் காட்சிப் படுத்தபட்டும் அதாவது கொரியன் அக்குப்பஞர் முறை பெண்களுக்கான வைத்திய முறைகள் போன்றன.

அடுத்தாக ஆராய்ச்சி மாநாடு இடம் பெறவுள்ளது.அதில் 20 பேச்சாளர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்படவுள்ளனர். ஏரத்தாழ 300 வைத்தியர்கள் பங்கு பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வைத்திய ஆராட்சியாளர்கள் தங்களுடைய ஆய்வு கண்டு பிடிப்பக்களை சமர்ப்பிக்க உள்ளனர். ஆராய்ச்சி மாநாட்டில் தொற்றா நோய்கள் தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிக்கப்படவுள்ளது. அது அனைவருக்கும் தகவல் வழங்கக் கூடிய வித்தில் ஒழுங்கு செய்யப்பட்டள்ளது.

அத்துடன் கண்காட்சியில் இலங்கையில் காணப்படும் 1500 க்கும் மேற்பட்ட வைத்தியத் தாவரங்கள் அதனுடாக கிடைப்பெருகின்ற வைத்திய பயன்கள்  தொடர்பான வழிமுறைகளும் பல்வேறு கூடங்களின் மூலம் காட்சிப் படுத்தப்படவுள்ளது. என கிழக்கு மாகாண பிரதி செயலாளர் மேலும் தெரிவித்தார்.