மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இலங்கை தமிழ் பெண்ணாக நடித்திருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். 

இன்னிசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ஓடியோ வெளியீடு நேற்று சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் பங்குபற்றினர்.

இவ்விழாவில் பங்குபற்றி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில்,‘ 

மணிரத்னம் சார் படத்தில் நடிக்கவேண்டும் என்பது எம்முடைய பால்ய வயது கனவு. அந்த கனவு இந்த படத்தின் மூலம் நிறைவேறியது. 

இந்த படத்தில் நான் இலங்கை தமிழ் பெண்ணாக நடிக்கிறேன். படபிடிப்பு தருணங்கள் அனைத்தும் மறக்க முடியாதவை. இதற்காக அனைவருக்கும் நான் நன்றி சொல்கிறேன்.’ என்றார்.