இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு புறப்பட்டது வாழ்த்தி அனுப்பினார் ஜனாதிபதி

Published By: Raam

09 Mar, 2016 | 08:56 AM
image

இந்­தி­யாவில் நடை­பெறும் இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்­கேற்கும் இலங்கை அணி நேற்று இந்­தியா புறப்­பட்­டது. அஞ்­சலோ மெத்­தியூஸ் தலை­மை­யி­லான அணி­யி­னரை வழி­ய­னுப்பும் நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்­து­கொண்டு வாழ்த்தி அனுப்­பி­வைத்தார்.

6ஆவது இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இந்­தி­யாவில் நேற்று ஆரம்­ப­மா­னது. தகு­திகான் சுற்­றுக்கள் முடிந்­த­வுடன் எதிர்­வரும் 15ஆம் திகதி சுப்பர் 10 சுற்று ஆரம்­ப­மா­கின்­றது. இந்­நி­லையில் இலங்கை அணி நேற்று இந்­தி­யா­விற்கு புறப்­பட்­டது.

இலங்கை அணியை வாழ்த்­தி­ய­னுப்­பு­வ­தற்­காக கொழும்பு குதிரைத் திடல் மைதா­னத்தில் நேற்று விசேட நிகழ்­வொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அந்­நி­கழ்­விற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசேட அதி­தி­யாகக் கலந்­து­கொண்டார். அத்­தோடு விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­ரக, இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலைவர் திலங்க சும­தி­பால, விளை­யாட்­டுத்­துறை பிர­தி­ய­மைச்சர் ஹாரிஸ் மற்றும் அமைச்­சர்­க­ளான கயந்த கரு­ணா­தி­லக்க, சுசில் பிரே­ம­ஜ­யந்த ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர்.

ஒரு அணி ஒரு தேசம் என்ற விசேட வேலைத்­திட்­டத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆரம்­பித்து வைத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், எமக்கு தெம்பூட்டி வழியனுப்பிவைக்க அனைவரும் கூடியிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

அதன்பிறகு அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான அணி வீரர்கள் ஒவ்வொரு வருக்கும் கைலாகு கொடுத்து வாழ்த்தியனுப்பிவைத்தார் ஜனாதிபதி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35