சென்னையில் அழகிரி நடத்திய அமைதி பேரணி அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இது குறித்து  மேலும் தெரிவித்ததாவது,

‘தமிழகத்தில் நடைபெற்ற சி. பி. ஐ. மற்றும் வருமான வரித்துறையின் திடீர் சோதனை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, பின்பு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.க. சொல்வதை வைத்து தான் அரசியல் செய்யவேண்டிய நிலை தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜக.வின் வளர்ச்சி மற்ற கட்சிகளை கட்டுப்படுத்தியுள்ளது. அழகிரி தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணி தமிழக அரசியலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.’ என்றார்.